DRAG

Get In Touch

img

789 Inner Lane, Holy park,

California, USA

இலவச வீட்டு மனை பட்டா – அரசின் புதிய முறைப்படுத்தும் திட்டம்!

  • Home
  • Property
  • இலவச வீட்டு மனை பட்டா – அரசின் புதிய முறைப்படுத்தும் திட்டம்!

தமிழக அரசு குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக, இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது.

வருமான வரம்பு உயர்வு முந்தைய ₹3 லட்சம் ஆண்டு வருமானத் தகுதி, தற்போது ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு பெரிய நன்மையாக இருக்கும்.

முறைப்படுத்தும் பரப்பளவு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3 சென்ட் அல்லது உண்மையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் (எது குறைவாக உள்ளதோ அது) வரை முறைப்படுத்தப்படும். இதில் முதல் 2 சென்ட் இலவசமாகவும், கூடுதல் 1 சென்ட் நில மதிப்பில் வசூலிக்கப்படும்.

வருமானத்தின் அடிப்படையில் கட்டண விவரம்

நிலம் உங்கள் வளம்

₹5 லட்சத்திற்கு குறைவான குடும்பங்களுக்கு 2 சென்ட் இலவசம், 1 சென்ட் 25% நில மதிப்பில்

₹5 லட்சம் – ₹12 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 2 சென்ட் 50% நில மதிப்பில்

₹12 லட்சம் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு முழு நிலம் 100% நில மதிப்பில்

தகுதி நிரூபணத்திற்கான ஆவணங்கள் வருமானம், ஆதார், பான் விவரங்களை வருவாய் துறை அதிகாரிகள் சேகரித்து, சரிபார்க்கப்படும்.

பழங்குடி மக்களுக்கு சலுகை 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த பழங்குடி மக்கள், உறுதிப்பத்திரம் இல்லாவிட்டாலும், மாவட்ட குழு பரிசீலனை செய்து மாநில குழுவிற்கு பரிந்துரை செய்யும்.

img
  • அமைச்சரவை ஒப்புதல் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான ஒப்புதல் ஏற்கப்பட்டதோடு, ஏற்கனவே பிப்ரவரியில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • இது சமூக நலத்தையும், சமதர்மத்தையும் முன்னிலைப்படுத்தும் ஒருமுறை முறைப்படுத்தும் திட்டம். உங்கள் நில உரிமையை சட்டப்படி உறுதி செய்து கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு!

Your email address will not be published. Required fields are marked *

TA